எமது தூர நோக்கு
"பொதுக் கணக்களிப்பொறுப்பு மற்றும் நல்லாளுகையை நோக்காகக் கொண்டு பொதுத் துறையின் வழிகாட்டியாக இருத்தல்".
எமது செயற்பணி
"நிலைபேறான அபிவிருத்தியை பேணுவதற்காக சிறந்த நிதி முகாமைத்துவத்தினையும் உத்தம பொது வளப் பயன்பாட்டினையும் உறுதிப்படுத்துவதற்கு கணக்காய்வில் ஈடுபடுவதன் மூலம் நல்லாளுகையையும் பொதுக் கணக்களிப் பொறுப்பையும் மேம்படுத்துதல்"
எமது குறிக்கோள்கள்
வளங்களை தம்வசம் வைத்துள்ள நிறுவனங்களின் முகாமைத்துவங்கள் அவர்களுக்குள்ள பொதுக் கணக்களிப்பொறுப்பினை உறுதிப்படுத்தி பாராளுமன்றத்திற்கு அறிவிக்கின்றனவா என்பது தொடர்பில் சுயாதீன பரிசோதனையொன்றை மேற்கொள்ளுதல்
பொதுத்துறை நிறுவனங்களின் செயலாற்றலை பரிசோதிப்பதற்காக பொதுக் கணக்குகள் குழு (COPA) மற்றும் பொது முயற்சிகள் குழு (COPE) ஆகிய இரண்டு பாராளுமன்ற கண்காணிப்புக் குழுக்களிற்கும் உதவுதல்
முகாமைத்துவ அறிக்கைளினூடாக பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் அவர்களது கணக்களிப்பொறுப்பினை முன்னேற்றிக் கொள்வதற்கு கணக்காய்வு செய்யப்படுகின்ற நிறுவனங்களிற்கு உதவுதல்
எமது விழுமியங்கள்
| மேன்மை | |
| புத்தாக்கம் | |
| தலைமைத்துவம் |




